வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு !

Update: 2024-04-01 09:49 GMT

கலாநிதி வீராசாமி

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வாக்கு சேகரித்தார். சென்னை வடகிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ் சுதர்சனம், MLA மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் தலைமையில், மேற்குப் பகுதி கழக செயலாளர் வை.ம.அருள்தாசன் அவர்களின் முன்னிலையில் வட்ட கழக செயலாளர்கள் சிவக்குமார் எம்.சி., சேகர், பவுல் ஆகியோர் பங்கேற்று வார்டு 1, 2, 4 ஆகிய வட்டங்களில் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடையே திமுக சாதனைகளை எடுத்துச் சொல்லி வாக்கு சேகரித்தனர்.

Advertisement

இந்நிகழ்வில் 1வது மண்டலக் குழு தலைவரும், திருவெற்றியூர் கிழக்கு பகுதி கழக செயலாளருமான தி.மு.தனியரசு, 2வது மண்டல குழு தலைவரும், திருவெற்றியூர் மத்திய பகுதி கழக செயலாளருமான ஏ.வி .ஆறுமுகம், மாமன்ற உறுப்பினர் தோழர் ஜெயராமன், பகுதிக் கழக நிர்வாகிகள் திருசங்கு, வஜ்ரவேல், குமரவேல், இந்துமதி, குறளரசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆர்.டி.மதன்குமார், மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் திரளாக பங்கேற்றனர்.

Tags:    

Similar News