சென்னையில் வாக்கு எண்ணும் பணி: அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-05-29 16:08 GMT

வாக்கு எண்ணிக்கை பயிற்சி முகாம்

சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி முகாம் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகை அரங்கில் சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

ஜூன் 4 ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் மற்றும் நுண் பார்வையாளர்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் 357 நுண்பார்வையாளர்கள்,

380 உதவியாளர்கள், 374 மேற்பார்வையாளர் என 1,433 பேர் சென்னையில் 3 மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நுண் பார்வையாளர்கள் வாக்குபதிவு இயந்திரத்தை சீல் பிரிப்பது, வாக்கு எண்ணிக்கையை வீடியோ செய்வது, முகவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பது போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படும் நிலையில் மேற்பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு விதிமுறைகளை எடுத்துரைத்தனர்.

Tags:    

Similar News