மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்

தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்க மகளிர் திட்டத்தின் சார்பில் தர்மபுரியில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-03-19 08:14 GMT

தருமபுரி நகராட்சி பூ மாலை வணிக வளாகத்தில் அமைந்துள்ள தருமபுரி நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டத்தின் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தை மகளிர் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர்  நேற்று மாலை தொடங்கி வைத்து, வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, அறிவுறுத்தலின் பேரில், தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் தருமபுரி பூ மாலை வணிக வளாகத்தில் அமைந்துள்ள நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் தொடங்கி நான்கு ரோடு, மத்திய பேருந்து நிலையம், புறநகர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் பூமாலை வணிக வளாகத்தை சென்றடைந்தது. இந்த வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் சுமார் 150 -க்கு மேற்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு 100% வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி. பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் வாக்காளர் உறுதிமொழியான மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும் ஒவ்வொரு தேர்தலிலும், அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம். என்ற உறுதிமொழியினை மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் பத்ஹூ முகம்மது நசீர்  வாசிக்க மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட அலுவலர்கள் சஞ்சீவிகுமார் மற்றும் முருகேசன். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், இயக்க மேலாளர்கள். வட்டார சமுதாய அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News