ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

காவேரி பட்டினத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மகளிர் சுய உதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-26 06:18 GMT

விழிப்புணர்வு பேரணி

 கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மகளிர் திட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலர் அலகின் தலைமையில் காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த பேரணி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் ஹப்தா பேகம் மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர் கணேசன் உதவி திட்ட அலுவலர் பழனி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ் குமரன், செந்தில் வட்டார இயக்க மேலாளர் (பொறுப்பு) பரிமளா வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகாலட்சுமி, சங்கீதா, கஸ்தூரி ஆகியோர் முன்னிலையில் 36 ஊராட்சிகளில் உள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்கள் 150 இப்பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News