வாக்காளர் பெயர் சேர்ப்பு சிறப்பு முகாம் - ஆட்சியர் ஆய்வு

Update: 2023-11-05 02:33 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தல்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம், முகவரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. ரெகுநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமை ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்நிகழ்வின்போது கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், துணை வட்டாட்சியர் பரமசிவன், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News