குமரியில் 640 மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம்
குமரி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.;
வாக்காளர் சிறப்பு முகாம்
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,698 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ள 640 மையங்களிலும் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இளம் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து தங்களது பெயர்களை பதிவு செய்த னர். பெண் வாக்காளர்களும் அதிகமானோர் வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள்.
பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்கும் ஒரு சிலர் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு இளம் வாக்காளர்களை, அரசியல் கட்சியினர் பலர் அழைத்து வந்திருந்தனர்.
18 வயது நிரம்பிய பெண்கள் தங்களது பெற்றோருடன் வந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினார்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 5.30 மணி வரை நடைபெறுகிறது.இதை தொடர்ந்து நாளை (5-ந் தேதி) யும், வருகிற 18 மற்றும் 19 -ந் தேதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.