ராசிபுரம் அருகே வாக்காளர் சிறப்பு முகாம்

ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர் பெயர் சேர்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது.;

Update: 2023-11-04 10:07 GMT
ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர் பெயர் சேர்தல் சிறப்பு முகாம்..
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் இளம் வாக்காளர் பெயர் சேர்தல் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்தார். பின்னர் அவர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில், 20 லட்சம் மக்கள் தொகை உள்ளது. அக்டோபர் 27ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிட்டோம். அதில், 14 லட்சத்து 19 ஆயிரம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். இதில், 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை, மக்கள் தொகையுடன் கணக்கிடும்போது சுமார் 44 ஆயிரம் பேர் இருக்க வேண்டும்.

ஆனால், தற்போது வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 ஆயிரம் பேர் மட்டுமே புதிய வாக்காளர்கள் உள்ளனர். இந்த இடைவெளியை குறைக்க வேண்டும், புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்பதற்காக பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் நாளை முதல் 4 நாட்கள் சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெறுகிறது. இதனை இளம் வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இளம்வாக்காளர்களுக்கு உரிமைகள் தெரிகிறது, ஆனால் கடமைகளை மறக்கக் கூடாது. வாக்காளர் அட்டை வாங்க வேண்டும், கண்டிப்பாக வாக்களிப்பதை செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வெளிப்படையான ஜனநாயகத்தை உருவாக்க முடியும். தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக வர அத்தனை இளம் வாக்காளர்களும் வாக்காளர் அட்டையை பெற வேண்டும். வரக்கூடிய தேர்தலில் வெளிப்படை தன்மையோடு ஆராய்ந்து நம் பகுதிக்கு எது தேவை, தேவையில்லை எனத் தெரிந்து நல்ல தலைவரை தேர்வு செய்யும்போது நமது மாவட்டம் வளர்ச்சிப் பாதயை நோக்கிச் செல்லும். எனவே, இளம் வாக்காளர்கள் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், 7 லட்சத்து 31 பேர் பெண் வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்கள், 6 லட்சத்து 88 பேர் உள்ளனர் எனத் தெரிவித்தார். இம்முகாமில், கல்லூரி தாளாளர், முதல்வர், அரசு அதிகாரிகள் மற்றும் இளம்வாக்காளர்கள் பலரும் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News