மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்தே வாக்களிப்பு!
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளில் இருந்து வாக்குப்பதிவு செய்வதை மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலரும் ஆய்வு மேற்கொண்டனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வீடுகளில் இருந்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளடங்கிய 114-தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் 232 தபால் வாக்குகள் உள்ளன.
அதில் ராயபுரம் எல்.ஆர்.ஜி. லே-அவுட், ராயபுரம் விரிவாக்கம், வாவிபாளையம், சடையப்பன் கோவில் முதல் வீதி, கே.பி.என். காலனி, 4-வது வீதி உள்ளிட்ட பகுதிகளில் மூத்துக்குடி மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் இ.ஆ.ப., அவர்கள், மாநகராட்சி ஆணையாளரும், தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான பவன்குமார் ஜி. கிரியபனவர் இ.ஆ.ப., ஆகியோர் வாக்குப்பதிவு நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.