வாக்கு இயந்திரங்கள் குறித்து ஆட்சியர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வாக்கு சாவடி மையங்களுக்கு சுழற்சி முறையில் வாக்கு இயந்திரங்கள் தேர்வு செய்து அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது.
Update: 2024-04-05 04:53 GMT
நெல்லையில் வாக்கு சாவடிகளுக்கு செல்லும் வாக்கு இயந்திரங்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நேற்று (ஏப்.4) நடைபெற்றது. இதில் ஆட்சியர் கார்த்திகேயன் பேசுகையில், 19ஆம் தேதி வாக்களிக்கும் வகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு 18ஆம் தேதி அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று சேரும் வகையில் அனுப்பி வைக்கப்படும் என்றார்.