வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்
கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Update: 2024-03-23 06:00 GMT
பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024-னை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்தனுப்பும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.