கோவை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

கோவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-16 13:32 GMT

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்

கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் அனைத்து கட்சிகளும் வாக்காளர்கள் ஓட்டு செலுத்த பணம் கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவியது. இது தொடர்பாக நேற்று கோவை மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க கோரி மனு அளித்திருந்தனர்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறி மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் மாவட்ட தேர்தல் அலுவலரை நேரில் சந்தித்து முறையிட்டனர். கோவை மற்றும் பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள்,

பொதுமக்கள் பணத்தை மட்டுமே பிடிப்பதாகவும் ஆனால் கட்சியினர் பொதுமக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதில்லை என மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் புகார் தெரிவித்தார்.எனவே ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags:    

Similar News