காவல்துறை சார்பில் நடைபயண விழிப்புணர்வு பேரணி
காங்கேயம் காவல் துறை சார்பில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அட்டவணையை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு அறிவித்தது. இதன்படி நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கேயம் பகுதியில் அனைத்து வாக்கு சாவடிகளிலும் 100 சதவிகித வாக்குபதிவை வழியுறுத்தி பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் கு. பார்த்திபன் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலிசாரை கொண்டு மக்களுக்கு தேர்தல் பாதுகாப்பு குறித்த நடை பயண பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணி காங்கயம்- தாராபுரம் சாலையில் உள்ள களிமேடு பகுதியில் துவங்கி காங்கயம் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் காங்கேயம் காவல் நிலையம் வரை நடை பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இப்பேரணியில் காங்கேயம் காவல் ஆய்வாளர் விவேகானந்தன், உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக் மற்றும் 100க்கும் மேற்பட்ட போலிசார்கள் கலந்து கொண்டனர்.