பள்ளி பங்குதாரருக்கு பிடிவாரண்ட் - நீதிமன்றம் உத்தரவு
:கெங்கவல்லியில் காசோலை மோசடி வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத பள்ளி பங்குதாரருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Update: 2024-06-13 07:55 GMT
கெங்கவல்லி:கெங்கவல்லியை சேர்ந்தவர் கஜேந்திரன், 65. அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பங்குதாரராக இருந்தார். 2023 ஏப்., 25ல், பள்ளி பங்குதாரர்கள் சார்பில் வழங்கப்பட்ட, 10 லட்சம் ரூபாய் காசோலை, வங்கியில் பணமின்றி திரும்பியது. இதுகுறித்து கஜேந்திரன், 2023 அக்., 20ல், ஆத்தூர் விரைவு நீதிமன்றத்தில், தனியார் பள்ளி பங் குதாரர்களான சிவாஜி, 70, கதிர்வேல், 58, மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கிலும், மாஜிஸ்திரேட் ஞான சம்பந்தம் நேற்று, சிவாஜி, கதிர்வேலுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்தார். அத்துடன், 10 லட்சம் ரூபாயை, 3 மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டார். இதில் சிவாஜி அளித்த மனுவின்படி ஜூலை 8 வரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. கதிர்வேல் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், 'பிடிவாரன்ட்' பிறப்பித்து உத்தரவிட்டார்.