ஓரத்தூர் நீர்தேக்கம் பணி நிறைவு பெறாததால் வீணாகிய மழைநீர்..!

ஓரத்தூரில் நீர்தேக்க பணி நிறைவு அடையாததால் மழைநீர் வீணாகிறது.

Update: 2023-12-16 11:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே கொளத்தூர் பகுதியில் அடையாறு ஆற்றின் கிளை கால்வாய் துவங்குகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் 30-க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் இந்த கிளை கால்வாய் வழியே வரதராஜபுரம் பகுதியை கடந்து சென்னை பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது. வெள்ள பாதிப்பை குறைக்கவும், வீணாகும் மழை நீரை தேக்கி வைக்கும் வகையில் ஒரத்தூர் அடையாறு கிளை கால்வாய் குறுக்கே ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் கிராம ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்க பொதுப்பணி துறையினர் திட்டமிட்டனர்.

இதை எடுத்து 2019ல் அதிமுக ஆட்சியில் 55.85 கோடி ரூபாய் மதிப்பில் வருதோ நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் துவங்கியது. 763 ஏக்கர் நீர் பரப்புடன் ஒரு டிஎம்சி நீரை தேக்கி வைக்கும் வகையில் இந்த நீர் தேக்கம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. நீர் தேக்கம் அமையும் அடையாறு கால்வாய் குறுக்கே 5 கண் மதகு அமைக்கப்பட்டுள்ளது இங்கிருந்து ஆரம்பாக்கம் ஏரி வரை நீர்த்தேக்கத்தின் ஒரு புறம் கரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் ஐந்து கண் மறதியில் இருந்து ஒரத்தூர் ஏரி வரை கரையமைக்க 84 ஏக்கர் பட்டா நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. ஒரத்தூர் நீர்த்தேக்கம் அமைய நிலம் கையகப்படுவதற்கு முன்பாக நீர்த்தேக்கத்தின் உள்ளே செல்லும் ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஆகிய இரண்டு ஏரிக்கரைகள் கடந்த 2020இல் வெட்டி அகற்றப்பட்டது.

இதனால் மழைக்காலங்களில் தண்ணீரை சேர்க்க முடியாமல் வெளியேறியது. இதை தடுக்க ஒரத்தூர் மற்றும் ஆரம்பாக்கம் ஏரியின் கரை அகற்றிய பகுதிகளில் மண் கொட்டி தற்காலிக கரை அமைக்கப்பட்டது. எனினும் 2021 இல் பெய்த கனமழையில் கரைகள் உடைப்பு ஏற்பட்டு ஒரத்தூரில் பயிரிடப்பட்ட 250 ஏக்கர் விவசாய நிலத்தில் உபரி நீர் புகுந்து நெற்பயிர் மூழ்கி நாசமானது.

Tags:    

Similar News