வாய்க்கால்களில் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
Update: 2023-12-20 05:34 GMT
தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள 18-ஆம் கால்வாய், பி.டி.ஆர். மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.