தண்ணீர் பந்தல் பிரிவு- காரும் காரும் மோதி விபத்து

தண்ணீர் பந்தல் பிரிவு- காரும் காரும் மோதி விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2024-05-19 13:24 GMT
தண்ணீர் பந்தல் பிரிவு- காரும் காரும் மோதி விபத்து. நான்கு பேர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், மண்மங்கலம், அருகே உள்ள கோயம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் மகிழன் வயது 8, அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் உறவினர் அஜின் மகன் அனீஸ்குமார் வயது 16, தாந்தோணி மலை மதி7பள்ளம் பகுதியைச் சேர்ந்த கார்மேகம் மகன் ரிதுன் வயது 9, இவர்கள் நான்கு பேரும் இவர்களுக்கு சொந்தமான காரில் மே 18ஆம் தேதி அதிகாலை 4.30-மணி அளவில், கரூர் - கோவை சாலையில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது கார் தண்ணீர் பந்தல் பிரிவு அருகே கோபிகா டெக்ஸ் எதிர்புறம் சென்றபோது, திருச்சி மாவட்டம் துறையூர் கஞ்சிரிமலை புதூர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு கார் சசிகுமார் ஓட்டிச் சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சசிகுமார் காரில் பயணித்த அத்தனை பேருக்கும் படுகாயம் ஏற்பட்டது. இந்த காரில் பயணித்த சசிகுமார், மகிழன், அனீஸ், ரிதுன் ஆகிய நான்கு பேரையும் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சசிகுமார் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.
Tags:    

Similar News