மதுரை மாநகரில் வாராந்திர குறைதீர் கூட்டம்

வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 44 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையரிடம் அளித்தனர்.

Update: 2024-06-26 13:52 GMT

குறைதீர் கூட்டம்

மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் 44 மனுதாரர்கள் நேரடியாக தங்களது புகார் மனுக்களை காவல் ஆணையர் அவர்களிடம் அளித்தனர்.காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் போக்குவரத்து (பொறுப்பு - தலைமையிடம்) ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர் அவர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Tags:    

Similar News