அரசு பள்ளியில் புதிய மாணவர்களுக்கு வரவேற்பு விழா!

Update: 2024-06-10 11:33 GMT
  • whatsapp icon

கோடை விடுமுறை முடிந்து இன்று(10.06 .2024)பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரதிதாசன் சாலை ராசிபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களையும், இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களையும், பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் வரவேற்றார். இவ்வாண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நுழைவாயிலில் இருந்து வரவேற்பு கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நோட்டு புத்தகங்கள்,  இனிப்புகள் கொடுக்கப்பட்டு பள்ளியின் அனைத்து மாணவர்களின் கரகோஷத்துடன் வரவேற்பு வட்டார கல்வி அலுவலர் அருள்மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

Tags:    

Similar News