திராவிடர் கழக இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணிக்கு சங்ககிரியில் வரவேற்பு !
சங்ககிரி:திராவிடர் கழக இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணிக்கு சங்ககிரியில் வரவேற்பு விழா சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றுது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-16 06:28 GMT

இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் கழக்ததின் சார்பில் மத்தியரசு நீர் தேர்வினை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி ஈரோட்டிலிருந்து சங்ககிரிக்கு வந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை வரவேற்கும் விழா சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றுது. திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர்கழகத்தின் சார்பில் மத்தியரசு நீட் தேர்வினை ரத்து செய்ய வேண்டும், சமூகநீதி காக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோட்டிலிருந்து சங்ககிரிக்கு வந்த இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக மாவட்டத்தலைவர் வீரமணி ராஜூ தலைமை வகித்து வரவேற்று நீட் தேர்வினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார். திராவிடர் கழக மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் செயலாளர் மதியழகன், நிர்வாகிகள் சிவபாரதி, சுப்ரமணியன் ஆகியோர் பேசினர். மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அன்புமதி, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, கலைவாணன், சுரேஷ்குமார், சௌந்திரராஜன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.