நலத்திட்ட உதவிகள் : காணொளி காட்சியில் முதலமைச்சர் வழங்கினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் அரசுப்பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி ஆட்சியரகத்தில் காணொலி வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.;

Update: 2024-02-16 09:57 GMT
நலத்திட்ட உதவிகள் : காணொளி காட்சியில் முதலமைச்சர் வழங்கினார்.


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கலைவாணர் அரங்கில் அரசுப்பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி ஆட்சியரகத்தில் காணொலி வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.


  • whatsapp icon

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று (16.02.2024) மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இளைஞர்களுக்கு அரசுப்பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி மாவட்ட ஆட்சியரகத்தில் காணொலி வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் இ.ஆ.ப.அவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் தமிழ்ச்செல்விபோஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஷேக் அப்துல்காதர், தனித்துணை ஆட்சியர் தெய்வ குருவம்மாள், மாவட்ட வழங்கல் அலுவலர் அனிதா, செய்திமக்கள் தொடர்பு அலுவலர் இரா.இளவரசி, மாவட்ட மின் ஆளுமை மேலாளர் துர்கா. அலுவலக மேலாளர் (பொது) திரு.ஹரிஹரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News