ஸ்பிக் நகர் ரோட்டரி கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடியில் ரோட்டரி கிளப் ஆளுனர் அலுவலக ஆய்வுக்கூட்ட விழாவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி முத்தையாபுரம் ஸ்பிக் நகர் ரோட்டரி கிளப் ஆளுனர் அலுவலக ஆய்வுக்கூட்ட விழா ஸ்பிக் ஆபிசர்ஸ் கிளப் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது. ரோட்டரி கிளப் தலைவர் வி.சுந்தரேசன் தலைமை தாங்கினார். கிளப் செயலாளர் முத்துராஜேஸ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ரோட்டரி கிளப் ஆளுனர் பொறியாளர் ஆர்.முத்தையா பிள்ளை, துணைநிலை ஆளுனர் ஏ.சிவராம கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த சமூக சேவகர்கள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி மாணவ மாணவியருக்கு விருது மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கௌரவித்தார்கள்.
முன்னதாக ரோட்டரியன் சிவகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு இயக்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் மட்டும்மல்லாது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் நடவு செய்து, பசுமை குறுங்காடுகளை உருவாக்கி பராமரித்து வரும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) நிறுவனத் தலைவரும், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான பசுமைக் குழு உறுப்பினருமான எம்.ஏ.தாமோதரனுக்கு பசுமைக்கான சேவையை பாராட்டி அவருக்கு ரோட்டரி கிளப் ஆளுனரான பொறியாளர். ஆர்.முத்தையாபிள்ளை "பசுமை தோழன்" என பெயர் சூட்டி விருதும் சான்றிதழும் வழங்கி கௌரவித்தார்.