சேந்தமங்கலத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா

சேந்தமங்கலத்தில் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை திட்டத்தின் சார்பில் 1000 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

Update: 2023-11-10 13:46 GMT

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேந்தமங்கலத்தில் கலைஞர் உரிமைத் திட்டத்தின் கீழ் மகளிர் உரிமை திட்டத்தின் சார்பில் 1000 பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமா, அட்மா குழு தலைவர் அசோக்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.

விழாவில் முகாம்களில் விண்ணப்பித்து கள ஆய்வு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 புதிய பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000- உரிமைத் தொகை பெறும் வகையில் மகளிருக்கு வங்கி பற்று அட்டைகளை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், எம்.பி., ராஜேஸ்குமார் ஆகியோர் வழங்கினார்.

விழாவில் எம்.எல்.ஏ., கள் பொன்னுசாமி, ராமலிங்கம், மாவட்ட டி.ஆர்.ஓ., சுமன், ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார்கள் சீனிவாசன், சக்திவேல், மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள், மக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News