மேற்கு மாவட்ட திமுக வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் !!

மொரப்பூர் கொங்கு மஹாலில் முன்னாள் அமைச்சர் தலைமையில் திமுக மேற்கு மாவட்ட வாக்கு எண்ணும் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-06-01 07:43 GMT

 திமுக 

தருமபுரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு என்னும் மையத்திற்கு செல்லும் திமுக மேற்கு மாவட்டம் சார்பில் முகவர்களுக்கு காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு மொரப்பூர் கொங்கு மஹாலில் தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக கழக அமைப்பு செயலாளர் பாரதி ஆலோசனை வழங்கினார். அப்போது வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் நான்காம் தேதி அன்று திமுக வேட்பாளரின் வாக்கு என்னும் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது இதில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு தொகுதி முகவர்கள் பங்கேற்றனர்.
Tags:    

Similar News