குப்பை சேகரிப்பில் தொய்வு ஏற்பட காரணம் என்ன?

Update: 2023-12-16 06:01 GMT

ஆலந்துார் மண்டல குழு கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆலந்துார் மண்டல குழு கூட்டம் அதன் தலைவர் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.உதவிக் கமிஷனர் ஸ்ரீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: ஆதம்பாக்கத்தில், மேலும் சில இடங்களில் மழைநீர் செல்ல வடிகால்கள் அவசியப்படுகிறது. சில ரேஷன் கடைகளில் மழைநீர் உட்புகுந்து சேதப்படுத்தியுள்ளது. நங்கநல்லுாரில் சேதமடைந்த மரங்களை அகற்ற 'சக்திமான்' இயந்திரம் அவசியப்படுகிறது. ஒவ்வொரு வார்டிலும் தண்ணீர் தேங்கி, பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்து நேரில் ஆய்வு செய்து தகவல் சேகரித்துள்ளோம். அந்த இடங்களில், அடுத்த மழைக்கு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதம்பாக்கத்தில், கவுன்சிலர் அலுவலகம் அமைத்து தர வேண்டும். மழையால் சீரழிந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். மீனம்பாக்கத்தில் பல தெருக்கள், மழைநீர் வடிகால்கள் சேதமடைந்து உள்ளன. நந்தம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் திட்டப் பணியின்போது மின் கேபிள் அடிக்கடி சேதமாவால், கம்போர்ட் யார்டில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அனைத்து வார்டுகளிலும் குப்பை சேகரிப்பில் தொய்வு ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 'உர்பேசர்' நிறுவனத்தின் துாய்மைப் பணியாளர் பற்றாக்குறைதான். கடந்த, 2009ம் ஆண்டு, வார்டில் உள்ள குடியிருப்பு கணக்கெடுப்புபடி பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது குடியிருப்பு மற்றும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அனைத்து வார்டிலும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
Tags:    

Similar News