இங்கு இருந்த எம்பி என்ன செய்தார்? காணொளியில் ராதிகா சரத்குமார் கேள்வி

இங்கு இருந்த எம்பி என்ன செய்தார்? என காணொளியில், பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார் கேள்வி எழுப்பினார்.;

Update: 2024-04-05 14:25 GMT

இங்கு இருந்த எம்பி என்ன செய்தார்? என காணொளியில், பாஜ வேட்பாளர் ராதிகா சரத்குமார் கேள்வி எழுப்பினார்.  

நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ராதிகா சரத்குமார் சமூக வலை தளங்களில் காணொளி ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கவில்லை என எதிர்க்கட்சியினர் அரசியல் செய்து வருகின்றனர். ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை L&T நிறுவனம் முதற்கட்டமாக பணிகளை தொடங்கி நடைபெற்று வருகிறது இதனை 33 மாதத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

Advertisement

அதேபோல் திருமங்கலம் ரயில்வே மேம்பாலம் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும். கள்ளிக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இல்லாததால், சாலையை கடப்பதற்கு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர் இதனால் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 வருடமாக இங்கே இருந்த எம்பி இதற்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. நான் கண்டிப்பாக இந்த மேம்பாலம் வருவதற்கு முயற்சி எடுப்பேன் அந்த காணொளி வாயிலாக தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News