திருப்பூரில் பள்ளிக்கு வந்தபோது வழி தெரியாமல் ராயபுரத்தில் சுற்றித்திரிந்த சிறுவன்
திருப்பூரில் பள்ளிக்கு வந்த போது வழி தெரியாமல் ராயபுரத்தில் சுற்றித் திரிந்த சிறுவனை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திருப்பூரில் பள்ளிக்கு வந்த போது வழி தெரியாமல் ராயபுரத்தில் சுற்றித் திரிந்த சிறுவன். போலிசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். திருப்பூர் ராயபுரம் போலிஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நேற்று மாலை 4 மணி அளவில் சீருடை அணிந்த பள்ளிச் சிறுவன் சுற்றித்திரிந்தான். அங்கிருந்தவர்கள் இதை கவனித்து திருப்பூர் வடக்கு போலிஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலிசார் அந்த சிறுவனை மீட்டு விசாரித்தனர். சிறுவன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அனுப்பி விசாரித்தனர். வடக்கு போலிஸ் ஏட்டு மகாராஜா மற்றும் போலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். சிறுவன் ஓடக்காடு பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்ததும் கனியாம்பூண்டியைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.
பள்ளியில் இருந்து வழிதவறி ராயபுரத்தில் சுற்றித் திரிந்த போது போலிசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து சிறுவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து சிறுவனை பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.