விவசாய தோட்டத்தில் மின் மோட்டார், காப்பர் கேபிள் திருடியவர்கள் கைது
தாராபுரம் அருகே விவசாய தோட்டத்தில் மின் மோட்டார் மற்றும் காற்றாலை நிறுவனங்களில் உள்ள காப்பர் கேபிள் ஆகியவற்றை திருடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.;
தாராபுரம் அருகே விவசாய தோட்டத்தில் மின் மோட்டார் மற்றும் காற்றாலை நிறுவனங்களில் உள்ள காப்பர் கேபிள் ஆகியவற்றை திருடிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் அருகே விவசாய தோட்டத்தில் மின் மோட்டார் மற்றும் காற்றாலை நிறுவனங்களில் உள்ள காப்பர் கேபிள் ஆகியவற்றை திருடிய 10,பேர்களை புதுச்சத்திரம் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்களின் புகாரின் பேரில் ஒயர் திருடிய 10, பேர் கைது! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் 500,க்கும் மேற்பட்ட விவசாய குடும்பத்தினரும் மற்றும் 300-க்கும் மேற்பட்ட காற்றாலை நிறுவனங்களும் உள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக விவசாயிகள் தோட்டத்தில் மின் போட்டார்கள் மற்றும் காப்பர் ஒயர்களும் தொடர்ந்து திருடு போனது. அதேபோல காற்றாலை நிறுவனங்களில் உள்ள விலை உயர்ந்த காப்பர் கேபிள்களும் திருடு போய் வந்தன.
இதுகுறித்து ஊர் பொதுமக்கள் ஒரு குழு அமைத்து திருடர்கள் யார்? என தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 4,பேர் கொண்ட கும்பல் மின் போட்டார்கள் கழட்டி கொண்டிருந்தது அப்போது தனது உறவினர் தோட்டத்தில் சம்பந்தமில்லாத நபர்கள் வேலை செய்வதை பார்த்த விவசாயி தனது உறவினருக்கு உங்கள் தோட்டத்தில் மோட்டார் வேலை செய்கிறீர்களா என போன் செய்து கேட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் அப்படி யாரையும் நான் தோட்டத்திற்கு அனுப்பவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த விவசாயிகள் யார் அவர்கள் என சென்று பார்த்த போது நான்கு பேரும் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு கிராம மக்கள் அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு ஓட்டம் பிடித்த 4,பேர்களையும் பிடித்து தர்ம அடி கொடுத்து விசாரித்தனர். அப்போது. திருநெல்வேலி மாவட்டம் லிங்க பாண்டியன் மகன் கண்ணன் என்பவர் புதுச்சத்திரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து அதில் பழைய இரும்புகளை வாங்கி விற்பனை செய்து வருவதாக பிடிபட்ட நான்கு திருடர்களும் தெரிவித்தனர். இதை அடுத்து தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் புது சத்திரத்தில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று பார்த்தபோது விவசாயிகளிடம் இருந்து காணாமல் போன மோட்டார் மற்றும் காப்பர் ஒயர்கள் போன்றவற்றை வீட்டில் அடுக்கி வைத்திருந்தனர்.இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் வீட்டில் தங்கி இருந்த, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர், பாலாஜி, சக்தி முருகன், கதிரேசன், கோபிகணேஷ், சக்திவேல், முத்துச்செல்வன்,ராகுல்,செல்வன், கண்ணன் உட்பட 10,பேர்களையும் பிடித்து 400,க்கும் மேற்பட்ட ஊர் பொதுமக்கள் திருடர்களை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
அப்போது.புதுச்சத்திரம்,கோவிந்தாபுரம், பொன்னாபுரம், அம்மாபட்டி உள்ளிட்ட 30,க்கும் மேற்பட்ட கிராமங்களில் பழைய இரும்பு வியாபாரம் செய்வது போல பல்வேறு வீடுகள் விவசாயிகளின் தோட்டங்கள் ஆளில்லாத காற்றாலை பகுதிகளில் சென்று மின்சார மோட்டார் காப்பர் ஒயர்கள் ஆகியவற்றை திருடி ஒயர்களை தீயிட்டு கருக்கி அதிலுள்ள காப்பர் கம்பிகளை பொள்ளாச்சியில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. மேலும் விவசாயிகள் வளர்க்கும் ஆட்டுக்குட்டிகளை திருடி கறிக்கடைகளுக்கு விற்பனை செய்தும் வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த வாரம் ஆட்டுகளின் வாயில் துணியை வைத்து அடைத்து 50,க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியதாக 10, திருடர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் திருடிய 10 திருடர்களையும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து தாராபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் விசாரணை நடத்தியதில் 10,பேர்களும் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டனர். அதன் பிறகு தாராபுரம் குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.