கீழ்வேளூரில் 6 வது நாளாக பரவலான மழை - விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதியில் 6வது நாளாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை கோடை உழவிற்கு உகந்தது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2024-05-14 02:38 GMT

பைல் படம் 

நாகை மாவட்டம்  கீழ்வேளூர்  பகுதியில் கடந்த 6 நாள்களாக காலை நேரத்தில் கரு மேக மூட்டம் ஏற்பட்டது அதைக் தொடர்ந்து  கீழ்வேளூர், திருக்குவளை பகுதியில் ஆங்காங்கே கன மழையும், சில இடங்களில் லேசான மழையும் பெய்தது.கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் வெயில் சுட்டெரிந்தும்,கடந்த சில நாாள்களாக அனல் காற்றும் வீசி வந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது.  இந்நிலையில் கடந்த 6நாள்களாக காலை நேரத்தில்   மேக மூட்டம் காணப்பட்டு 6 நாட்களிலும் ஆங்காங்கே பலத்த மழையும், பல இடங்களில்  லேசான மழை தூரல் சிறிது நேரம் மழை பெய்தாது.

 கீழ்வேளூர் பகுதியில் பெரும்பாலான பகுதியில் கோடை உழவுக்கு தேவையான மழை பெய்துள்ளதால் சாகுபடி பணிக்கு ஏற்றதாக அமைந்துளளதால் இந்த ஆண்டு சாகுபடி பணியை தொடங்கலாம் என்பதால் விவசாயிகள் மழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News