தூசி அருகே மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை: கணவன் கைது
தூசி அருகே தனியாக வாழ்ந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-30 15:09 GMT
கோப்பு படம்
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அடுத்த மாமண்டூர் கிராமத்தை சேர்ந்த ரேவதி (27) என்பவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையில் நடந்த பிரச்சினையால் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.
இதனையடுத்து கணவர் சதீஷ் ரேவதியை இரும்பு சுத்தியலால் தலையில் ஓங்கி அடித்ததில், ரேவதி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து இறந்து விட்டார்.இதுகுறித்து தூசி போலீசார் வழக்கு பதிவு செய்து சதிஷை கைது செய்தனர்.