உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை சாவு
கடம்பூர் வனப்பகுதியில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட எக்கத்தூர் கச்சபள்ளம் பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் கடந்த 9-ம் தேதி ரோந்து சென்றனர் அப்போது அந்த பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை வயது முதிர் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சோர்வடைந்த நிலையில் படுத்து கிடந்தது.
உடனே இது குறித்து வனத்துறையினர் கால்நடை டாக்டர் சதாசிவத்துக்கு தகவல் கொடுத்து அதன் பெயரில் டாக்டர் சதாசிவம் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைக்கு குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளித்தனர் மேலும் மருத்துவ குழுவினர் வனத்துறையினரும் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு தொடர்ந்து யானை கண்காணித்து வந்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2 மணி அளவில் அந்த காட்டு யானை உயிரிழந்து இது தொடர்ந்து பெண் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டு காட்டு யானை உயிரிழப்பு வன ஆர்வலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது