அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் வன விலங்குகள் பாதுகாப்பு தினம்
வன விலங்குகள் பாதுகாப்பு தினம்
உலக வனவிலங்குகள் பாதுகாப்பு தினமானது சுற்றுச்சூழல் சமநிலையில் வன விலங்குகளின் முக்கியத்துவம் மற்றும் அழிந்து வரும் வனவிலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வனவிலங்குகள் பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி விம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தடய அறிவியல் பிரிவு மாணவர்களின் பங்களிப்பு குறித்த விரிவுரை நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடந்தது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார். சேலம் சுவான் அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரவணர் கலந்து கொண்டு பேசினார். அழிந்து வரும் இந்திய நட்சத்திர ஆமையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து ஆமை வடிவமைப்பை கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை துறையின் தடயவியல் பிரிவு பொறுப்பாளர் மோகன், உதவி பேராசிரியர்கள் லின்சி, ராஜஸ்ரீ, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர், குமரன் ஆகியோர் செய்து இருந்தனர்.