மின் கட்டணம் வசூல் மையத்தில் கூடுதல் கவுன்டர் திறக்கப்படுமா?

மின் கட்டணம் வசூல் மையத்தில் கூடுதல் கவுன்டர் திறக்கப்படுமா? என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-12-29 08:46 GMT

வரிசையில் நிற்கும் மக்கள்

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் கட்டணம் வரி வசூல் மையம் இரு கவுன்டர்களுடன் இயங்கி வந்தது. இங்கு விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி பிரிவுக்கு உட்பட்ட மின் நுகர்வோர் மட்டுமின்றி காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தினரும் மின் கட்டணம் செலுத்தி வந்தனர்.

இந்நிலையில், டிச., 1 முதல், ஒரு கவுன்டர் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இதனால், மின் நுகர்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மின்கட்டணம் செலுத்துவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதில், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட இணைநோய் உள்ளவர்கள், முதியோர் நீண்டநேரம் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

எனவே, ரயில்வே ரோடு மின்வாரிய அலுவலக வரி வசூல் மையத்தில் கூடுதல் கவுன்டர் துவக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மின் நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்."

Tags:    

Similar News