பல்லாங்குழி சாலை சீரமைக்கப்படுமா?

பல்லாங்குழி சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2024-06-15 06:26 GMT

பல்லாங்குழி சாலை

கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டியில் இருந்து ராசாபட்டி செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையை கருப்பட்டி, கணபதிபுரம், கொல்லம்பட்டி, ராஜா புதுார், மீனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் பெய்த மழையால் சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவிகள் தடுமாறு கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். சாலையை சீரமைக்கக் கோரி பல் முறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்த பயனும் இல்லை. இதனால் அதிருப்தியடைந்துள்ள கிராமமக்கள் சாலையை விரைவில் சீரமைக்காவிட்டால் மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News