சிவகாசியில் இருசக்கர வாகன கட்டணம் அதிக வசூல்
சிவகாசியில் இருசக்கர வாகனத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைகாரர் மற்றும் ஆணையாளர்களுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்தது.
சிவகாசியில் வாகன காப்பகத்தில் ரூ.5க்கு பதில் ரூ.15 வசூல்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி பேருந்து மாநகராட்சி வாகன காப்பகத்தில் டூவிலர் உரிமையாளரிடம் ரூ.5க்கு பதில் 15 கட்டணம் வசூலித்த வழக்கில்,பாதிக்கப்பட்டவருக்கு குத்தகைதாரரும்,சிவகாசி மாநகராட்சி ஆணையாளரும் அல்லது தனித்தோ ரூ 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டுமென மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டது.
சிவகாசியை சேர்ந்தவர் சுப்பிரமணியம், நுகர்வோர் அமைப்பு நிர்வாகி,இவர் ஜன.31ல் கோவில்பட்டி செல்வதற்காக தனது டூவீலரை சிவகாரி பஸ் ஸ்டாண்ட்டில் உள்ள வாகன காப்பகத்தில் நிறுத்தும் போது,அங்கிருந்த ஊழியர் ரூ.5க்கு பதில் ரூ.15 பார்க்கிங் கட்டண வசூலித்து உள்ளார் ஆட்சேபனை தெரிவித்த சுப்பிரமணியத்தை அவமரியாதையாக பேசி உள்ளார்.
சுப்பிரமணியம்,வாகன காப்பக குத்தகைதாரர் முத்துக்கனி,சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் இழப்பீடு தரக்கோரி விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் நுகர்வோர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி,உறுப்பினர் முத்துலட்சுமி விசாரத்து,இதில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட வாகன கட்டணம் ரூ.10 திரும்ப வழங்கவும்,மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ10 ஆயிரம்,வழக்கு செலவு தொகை ரூ.3 ஆயிரத்தை, வாகன காப்பக குத்தகைதாரர் முத்துக்கனி,மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் சேர்ந்தோ அல்லது தனித்தோ 6 வார காலத்திற்குள் வழங்க உத்திரவிட்டனர்.