தூத்துக்குடியில் இருவேறு இடங்களில் தற்கொலை
தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் இளம்பெண் உள்பட இருவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவரது மனைவி சிவபாா்வதி (24). தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், சிவபாா்வதி நேற்று திடீரென வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே போல், தூத்துக்குடி மாதாநகரைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் வெங்கடேஷ் (29). தனியாா் டியூசன் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனமுடைந்த அவா் நேற்று வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து தாளமுத்துநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.