பெண்ணிடம் 81 பவுன் நகை, பணம் மோசடி செய்த பெண் கைது

ராஜாக்கமங்கலம் அருகே பெண்ணிடம் 81 பவுன் நகை, பணம் வாங்கி திருப்பி தராமல் மோசடி செய்த அவரது உறவுக்கார பெண்ணை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-07-05 02:59 GMT

சுகன்யா

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளை பகுதியை சேர்ந்த ராம் மனைவி சௌமியா (30) சௌமியாவின் உறவினர் மகன் ஆளூர், தோப்புவிளை பகுதியை சேர்ந்த அஜின் (34) இவரது மனைவி சுகன்யா (31)  என்பவர் திருமணம் மற்றும் விசேஷ வீடுகளுக்கு செல்லும்போது சௌமியாவிடம் இருந்து நகை வாங்கி அணிந்து செல்வது வழக்கம்.       கடந்த 23 - 5 - 2023 அன்று சுகன்யா அவரது கணவர் அஜின் ஈத்தாமொழி பூக்குடியிருப்பை சேர்ந்த சிவ குகன் (30) ஆகியோர் சௌமியா வீட்டிற்கு சென்று உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் என்று கூறி  சௌமியாவிடம் 81 பவுன்  நகையை வாங்கியுள்ளனர்.   

Advertisement

ஆனால் அவர் சொன்ன தேதியில் நகையை திருப்பி  கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து நகையை சௌமியா கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இந்த நிலையில் சுகன்யா, அஜின், சிவகுகன் நகைகளை பல்வேறு நிதி நிறுவனங்களில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.      மேலும் சௌமியாவிடம் 6 லட்சத்து 80 ஆயிரம் பணத்தையும் சுகன்யா பெற்றுள்ளார். இதை அடுத்து சௌமியா ராஜகமங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சுகன்யா, அஜித், சிவகுகன்  ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, சுகன்யாவை கைது செய்தனர். தலைமறைவான அஜித்,  சிவகுகன்  ஆகியோரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News