பயணியிடம் கொள்ளை அடித்த பெண் கைது !
பயணியிடம் மணிபர்சை கொள்ளை அடித்த பெண் கைது - போலீசார் வழக்கு;
By : King 24x7 Angel
Update: 2024-03-02 07:15 GMT
காவல்துறை
கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் மணிவேல் மனைவி பார்வதி, 27; இவர், நேற்று முன்தினம் மாலை கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 கிராம் நகை மற்றும் 300 ரூபாய் பணத்துடன் பார்வதி வைத்திருந்த மணிபர்சை பெண் திருடினார். இதனைப் பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அந்த பெண்ணைப் பிடித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் ஈரோடு மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த சின்னையன் மனைவி லட்சுமி, 60; என்பது தெரியவந்தது. உடன் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.