பாலாமடை ஆற்றில் மிதந்த பெண் சடலம்
திருநெல்வேலி மாவட்டம்,பாலாமடை ஆற்றில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-02-16 01:01 GMT
ஆற்றில் மிதந்த பெண் சடலம்
நெல்லை மாவட்டம் பாலாமடை ஊரில் உள்ள ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக நேற்று மாலை கங்கைகொண்டான் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். இது குறித்து தாழையூத்து போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் ராஜவல்லிபுரத்தை சேர்ந்த மாயாண்டி மனைவி ராமலட்சுமி என்பது தெரிய வந்தது.