கடன் தொல்லையால் பெண் தற்கொலை
திருச்சி பாலக்கரையில் கடன் தொல்லையால் அமிலம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-06-05 02:30 GMT
தற்கொலை
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தவமணி காலனியைச் சோ்ந்தவா் ஷகில் அகமது மனைவி கமருனிஷா (45). மகளிா் சுயஉதவிக்குழுவில் கடன் வாங்கிய இவா் சில மாதங்களாக கடன் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அவா் அமிலத்தை குடித்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இறந்தாா். இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.