நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை

சொத்து பிரச்சனை காரணமாக தாராபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-04-16 03:11 GMT

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், தெக்கலுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், (60).இவரது தந்தை ராமசாமி மற்றும் இரண்டு சகோதாரர்கள் பாலசுப்ரமணி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோருடன் சொத்து தகராறு ஏற்பட்டது. இவ்வழக்க தாராபுரம் உரிமையியல் கோர்ட்டில் நடந்து வந்தது.  இவ்வழக்கில் விசாரணையில் கடந்த வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிகிறது. கோர்ட்டுக்கு வந்த கோவிந்தம்மாள் வளாகத்தில் விஷம் அருந்தி விட்டு, பின்னர் கொண்டு வந்திருந்த மண்ணெண்யை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. சடலத்தை கைப்பற்றி  தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இறந்து போன கோவிந்தம்மாள் பாகப்பிரிவினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். வழக்கில் தோல்வியடைந்தார். மேல்முறையீட்டை கோர்ட் தள்ளுபடி செய்த காரணத்தால், மனமுடைந்து அவர் கோர்ட் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன் விஷத்தை குடித்து விட்டு, கூடையில் வைத்திருந்த மண்ணெண்ணைய ஊற்றி தீ பற்றியது தெரிந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் காப்பற்ற முயன்றும் முடியவில்லை. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவிந்தம்மாள் தன் தாயை கட்டையால் தாக்கியது தொடர்பாக, இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News