மகுடஞ்சாவடி அருகே விபத்தில் பெண் பலி
திருப்பூர் மாவட்டம் , மகுடசஞ்சாவடி அருகு கார் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் , லட்சுமி நகரை சேர்ந்தவர் விஷால் சேட் (வயது 53), ஜவுளி அதிபர். இவர் தன்னுடைய மனைவி பூனம் சேட் (49) மற்றும் உறவினர்களுடன் சேலத்திற்கு நேற்று முன்தினம் காலையில் காரில் வந்தார். மீண்டும் திருப்பூர் செல்வதற்காக சேலத்தில் இருந்து சங்ககிரி செல்லும் சாலையில் காரில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
காரை விஷால் சேட் ஓட்டி சென்றார். காளி கவுண்டம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற மற்றொரு கார் மீது மோதி அதற்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீதும் கார் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பூனம்சேட், தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் இறந்த பூனம்சேட் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.