மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
வேகத்தடையில் சென்ற போது தவறி விழந்தார்;
Update: 2023-12-11 00:25 GMT
பலியான பெண்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள குன்னங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அமுல்ராஜ் மனைவி ராஜலஷ்மி. அமுல்ராஜ் அவரது மனைவி ராஜலட்சுமியும் சங்கரன்கோவிலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சொந்த ஊரான குன்னங்குடிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளை அமல்ராஜ் ஓட்டி வந்தார். மோட்டார் சைக்கிள் பெரும்புத்தூர் அருகே சென்ற போது வேகத்தடையில் ஏறி இறங்கிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து ராஜலட்சுமி தவறி விழுந்து காயம் அடைந்தார். காயம் அடைந்த ராஜலட்சுமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.