ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் பலி

மதுரவாயலில், 'ஸ்கூட்டர்' மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், பெண் ஒருவர் உயிரிழந்தார்.;

Update: 2024-07-02 02:36 GMT
ஸ்கூட்டர் மீது லாரி மோதி பெண் பலி

பைல் படம்

  • whatsapp icon

மதுரவாயலில், 'ஸ்கூட்டர்' மீது கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், பின்னால் அமர்ந்து சென்ற பெண் பலியானார்.

மாங்காடைச் சேர்ந்தவர் பானு, 33. இவரது உறவினர் நிர்மலா, 47. இருவரும் நேற்று, அண்ணா நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, ஸ்கூட்டரில் சென்றனர். ஸ்கூட்டரை பானு ஓட்டினார். பின்னால் நிர்மலா அமர்ந்து சென்றார். மதுரவாயல் அடுத்த வானகரம் அருகே சென்ற போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் அமர்ந்து வந்த நிர்மலாவின் தலை மீது, கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியது.

அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பானு லேசான காயங்களுடன், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலின்படி வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், நிர்மலாவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய கன்டெய்னர் லாரி ஓட்டுனர் கிருஷ்ணமூர்த்தி, 47, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News