கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி
ஏற்காட்டில் கிணற்றில் துணி துவைத்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்காடு அருகே நாகலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோஸ். இவருடைய மனைவி ஜெர்சி (வயது 45). இவர்களுக்கு வர்ஷா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் ஜெர்சி நேற்று காலை 9 மணி அளவில் தனது வீட்டின் அருேக உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுத்து துணி துவைத்து கொண்டிருந்தார்.
இதையடுத்து மீண்டும் தண்ணீர் எடுக்க முயன்றபோது ஜெர்சி நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்ற சிறுவன் அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்தான். அதற்குள் ஜெர்சி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஏற்காடு போலீசார் இறந்த ஜெர்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.