திருச்சி அருகே பாதை தகராறு - ஒருவர் காயம்

திருச்சி மாவட்டம்,கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறு குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-03-04 17:26 GMT

தாக்குதல்

திருச்சி, திருவெறும்பூர் கிருஷ்ண சமுத்திரம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து .இவரது மகன் விடிவெள்ளி (31).அதே பகுதியை சேர்ந்தவர் மூக்கையன் (47 ) .இவரது மனைவி ராஜேஸ்வரி (40 ).இவர்கள் ஒரே பகுதியில் அருகருகே வசிக்கும் உறவினர்கள் .இவர்கள் இருவருக்கும் இடையே பாதைத் தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்த நிலையில் மூக்கையன் குழந்தைகள் விடிவெள்ளியின் இருசக்கர வாகனத்தை கவரை கிழித்துவிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த விடிவெள்ளி குழந்தைகளை திட்டியதாகவும் , அப்போது அங்கே வந்த ராஜேஸ்வரி குழந்தைகளுக்கு பற்களால் கடித்து அச்சுறுத்தும் வகையில் உருட்டு கட்டையை காட்டி மிரட்டி உள்ளார்.இதில் விடிவெள்ளிக்கு இடது கையில் பலத்த காயமடைந்தார். காயமடைந்த அவர் மீட்கப்பட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து விடிவெள்ளி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ராஜேஸ்வரி மற்றும் மூக்கையன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News