கார் மோதி பெண் பலி - போலீஸ் விசாரணை !

நாகை மாவட்டம் கீழையூர் அருகே கார் மோதி பெண் பலியான நிலையில் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.;

Update: 2024-07-16 06:13 GMT

நாகை

நாகை மாவட்டம் கீழையூர் எடத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் இவரது மகன் லோகநாதன் (21) இவர் கீழையூர் கடைத்தெருவில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கிகொண்டு மோட்டார் சைக்கிளில் கிழக்கு கடற்கரை சாலையில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தார்.  அப்போது முத்துபேட்டையிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி வந்த கார் திடீரென லோகநாதன் சென்ற மோட்டார்சைக்கில் மீது மோதியது.இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார் .இதில் அவருக்கு பலத் காயம் ஏற்பட்டது.

Advertisement

அதே நேரத்தில் லோகநாதனை மோதிய கார் கடைத்தெருவில் எதிர்புரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த   கீழையூர் கீழத்தெருவை சேர்ந்த  ஜெய்சித்ரா (53) அங்கன் வாடி பணியாளர் ஏனாபவர் மீதும் மோதியது .இதனால் அவரும் தூக்கிவீசப்பட்டார்.இதனால் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை ஒரத்தூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெய்சித்ரா வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என தெரிவித்தனர.  படுகாயம்அடைந்த லோகநாதன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணைசெய்து வருகின்றனர்.

Tags:    

Similar News