அரசு பேருந்து மோதி பெண் உயிரிழப்பு!

பெரியபாளையம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில், எதிரே டூவீலரில் வந்து கொண்டிருந்த ரதிதேவி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.;

Update: 2024-04-06 07:19 GMT

பெரியபாளையம் நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில், எதிரே டூவீலரில் வந்து கொண்டிருந்த ரதிதேவி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். 

திருவள்ளூர் மாவட்டம், மதுரவாசல் பகுதியைச் சேர்ந்த ஜீவா என்பவரின் மனைவி ரதிதேவி (31). அதே கிராமத்தைச் சேர்ந்த கோபி (48) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கன்னிகைபேர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பும்போது ஜனப்பன்சத்திரத்தில் இருந்து பெரியபாளையம் நோக்கி வந்த அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் பின் மோதியது. இதில் இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

Advertisement

ரதிதேவி மற்றும் கோபி இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு பெரியபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ரதிதேவி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் இவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News