தூத்துக்குடியில் லாரி மோதி பெண் பலி
தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-11 13:55 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி குமரெட்டியாபுரம் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மனைவி தாயம்மாள்(54). இவா் சம்பவத்தன்று இரவு குமரெட்டியாபுரம் பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த லாரி இவா் மீது மோதியதாம்.
இதில் பலந்த காயம் அடைந்த தாயம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவல் அறிந்து சிப்காட் போலீசார் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.