இளம்பெண் குழந்தைகளுடன் மாயம்
செய்யாறு அருகே கோடை விடுமுறைக்கு வந்த இளம்பெண் குழந்தைகளுடன் மாயமானார்.;
Update: 2024-05-16 14:08 GMT
இளம்பெண் மாயம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அண்ணாநகர் விரிவு பகுதியை சேர்ந்தவர் டில்லிபாபு (வயது 27). இவரின் சகோதரி கீதாவிற்கும் சின்ன காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசனுக்கும் திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனது தாய் வீடான சகோதரர் டில்லிபாபு வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார்.
மீண்டும் தனது கணவர் வீட்டிற்கு செல்வதாக குழந்தைகளை அழைத்துச் செல்வதாக கூறியவர் குழந்தைகளுடன் மாயமாகிவிட்டார்.இதுகுறித்து டில்லிபாபு கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.