3 வயது மகனுடன் பெண் மாயம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 3 வயது மகனுடன் பெண் மாயமானார்.
Update: 2024-06-26 15:35 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்தவர் குமார், கூலி தொழிலாளி. இவருக்கும் காவணியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள் (வயது 24) என்பவருக்கும் நிஷாந்த் (3) என்ற மகன் உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக கடந்த மாதம் காவணியாத்தூர் கிராமத்துக்கு மகனுடன் மாரியம்மாள் சென்று விட்டார்.
இந்த நிலையில் மாரியம்மாளின் தாய் திடீரென மருமகனுக்கு போன் செய்து மகனுடன் மாரியம்மாளை காணவில்லை என்று கூறினார்.இதுகுறித்து கீழ்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.